இந்தியாவில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, சாம்பல் நிறங்களில் சைபர்ஸ்டர் கிடைக்கும். ஐரோப்பிய மாடலில் ஆறு வித்தியாசமான நிறங்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்போர்ட்ஸ் காரின் மொத்த நீளம், அகலம், உயரம் முறையே 4,533 மிமீ, 1,912 மிமீ, 1,328 மிமீ ஆகும்.
77kWh பேட்டரி பேக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய இரட்டை மின் மோட்டார்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரின் உயர் ரக மாடலை எம்ஜி காட்சிப்படுத்தியது. இது 510 bhp பவரையும் 725 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. வெறும் 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். சீன லைட் டியூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிள் படி முழு சார்ஜில் 580 கிமீ தூரம் செல்லும். உலக சந்தையில், பின்புற ஆக்சில் பொருத்தப்பட்ட 308 bhp மின் மோட்டார் மற்றும் 64kWh பேட்டரி பேக் கொண்ட மாடலும் கிடைக்கிறது. உயர் ரக மாடல் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினால், இந்த சிறிய பேட்டரி மாடல் இந்தியாவிற்கு வரலாம்.