பிக்ஸ்டர் காரில் 10.1 அங்குல தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, பனோரமிக் சன்ரூஃப், 2 ஸோன் தானியங்கி குளிர்சாதன வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். முன்பக்க இருக்கைகளுக்கு வென்டிலேட்டட் வசதியும் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியும் வழங்கப்படும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) ஆகியவை எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக உள்ளன. ரெனோ பிக்ஸ்டர் எஸ்யூவி வரும் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO போன்ற மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகளுக்குப் போட்டியாக பிக்ஸ்டர் அமையும். குறிப்பாக, டீசல் எஞ்சின் இல்லாமல் ஹைபிரிட் மற்றும் டர்போ பெட்ரோல் தேர்வுகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய மாற்றாக இருக்கலாம்.