ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலம்... தனியாக இருந்த இளம்பெண்ணை வெறி தீர பலாத்காரம் செய்து கொடூர கொலை..!

Published : Jan 22, 2020, 04:12 PM IST
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலம்... தனியாக இருந்த இளம்பெண்ணை வெறி தீர பலாத்காரம் செய்து கொடூர கொலை..!

சுருக்கம்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கர்ணா பிரியதர்ஷினி (20). இவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா குமாரி ஷாகு (22). இவர்கள் இருவரும் படப்பை அடுத்த ஆதனஞ்சேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஓரகடத்தில் உள்ள பிரபல உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை ரஞ்சிதா குமாரி ஷாகு வழக்கம் போல காலை ஷிப்ட் வேலைக்கு சென்று விட்டார். கர்ணா பிரியதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார்.

செங்கல்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த வடமாநில பெண்ணை கதற கதற கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கர்ணா பிரியதர்ஷினி (20). இவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா குமாரி ஷாகு (22). இவர்கள் இருவரும் படப்பை அடுத்த ஆதனஞ்சேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஓரகடத்தில் உள்ள பிரபல உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை ரஞ்சிதா குமாரி ஷாகு வழக்கம் போல காலை ஷிப்ட் வேலைக்கு சென்று விட்டார். கர்ணா பிரியதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, மாலை பணி முடிந்து தோழி வீட்டிற்கு வந்து பார்த்த போது கர்ணா பிரியதர்ஷினி ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுதொடர்பாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்போது, கர்ணா பிரியதர்ஷினி உடலில் நகக் கீறல்கள், ரத்த காயங்கள் இருந்தன. பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வடமாநில இளம்பெண் கர்ணா பிரியதர்ஷினியை கற்பழித்து கொன்றது யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!