பாதிக்கப்பட்ட பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக காவல்துறையின் அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்ற நீதிபதி அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமாகாது என்று மகாராஷ்டிர மாநில அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தால்தான் அதை குற்றம் எனக் கூறலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மாநிலம் முலுந்த் என்ற இடத்தில் உள்ள விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து மூன்று பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம், இரண்டு பெண்களை விடுதலை செய்து, 34 வயதான பெண் ஒருவரை மட்டும் தியோனரில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் ஓராண்டுக்கு தங்கவைக்க உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம், "பாதிக்கப்பட்ட பெண் ஒரு மேஜர்... காரணமின்றி அவர் அடைத்து வைக்கப்பட்டால், அவரது உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறலாம்... காவல்துறையின் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக எங்கும் கூறப்படவில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் சுதந்திரமாக நடமாடவும் உரிமை உள்ளது" எனக் கூறியது.
Aavin vs Amul: தமிழகத்தில் நுழையும் அமுல்! ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?
பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து வாதிட்ட அரசு தரப்பு, அவர் மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறி விடுதலை செய்யக் கூடாது என்று கூறியது. அதை ஏற்காத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர் ஒரு மேஜர் என்றும், இந்தியக் குடிமகளாக, சுதந்திரமாக நடமாடுவதற்கான அடிப்படை உரிமை அவருக்கு உண்டு என்றும் கூறியது.
"பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நிச்சயமாக அவர்களுக்கு அவர்களின் தாய் உடன் இருப்பது அவசியம். மேலும் பாதிக்கப்பட்டவர் அவரது விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கப்பட்டால், அது அவரது உரிமையைப் பறிப்பதாகும்" என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, விடுதிகளில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ள வயதுவந்தவர்களை கணக்கெடுத்து, அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
அதன்படி, சென்ற மார்ச் 15ஆம் தேதி அன்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Apple iPhone 11: வெறும் ரூ.9,140க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 11! எங்கே, எப்படி வாங்கலாம்?
விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண் தான் எந்த ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். விசாரணை நீதிமன்றம் தனது தரப்பை பரிசீலிக்காமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பித்தது என்றும் அந்தப் பெண் முறையிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், எங்கும் வசிக்கவும் தனக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் பெண்களை விபச்சாரத்திற்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து முலுந்த் விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் வாடிக்கையாளர்கள் போல சென்று சோதனை செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 5G, 6G, 7G எதுவும் கிடையாது, குருஜி மட்டுமே! பிரதமர் மோடிக்கு அமெரிக்க தூதர் புகழாரம்