
நடிகர் மன்சூர் அலிகானுக்கு மூன்று மனைவிகள். அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமிதா மற்றும் மகன்,மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையல் நேற்று மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா மற்றும் அவரின் மகள் லைலா அலிகான், மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதா அவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நடக்கும்போது மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா ஆகியோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் வஹிதா அவருடைய சகோதரி உதவியுடன் அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.