லலிதா ஜுவல்லர்ஸ் நகை கொள்ளையன் அரெஸ்ட் .. ஒருவன் தப்பி ஓட்டம்… பிடிபட்டது எப்படி ? பகீர் தகவல் !!

By Selvanayagam PFirst Published Oct 4, 2019, 6:31 AM IST
Highlights

திருச்சியில்  உள்ள பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லர்சில் இருந்து  13 கோடி நகைகள் கொள்ளையடித்தவர்களில் ஒருவர்  திருவாரூரில் நடந்த வாகனை சோதனையில் சிக்கினார்.  மற்றொருவர்  தப்பியோடிவிட்டதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுத்ல் வேட்டை நடைபெற்று வருகிறது,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது. கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 28 கிலோ தங்க நகைகள், 145 கேரட் வைரம், 96 கிராம் பிளாட்டினம் என ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.  

நேற்று 2வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடையில் உள்ள 190 பேரில் 10 பேர்  வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால் கொள்ளை கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என வடமாநில ஊழியர்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதே நேரத்தில் புதுக்கோட்டையில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த  5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்தான்.  ஆனால் அவர்களுக்கும் லாதி ஜுவல்லர்ஸ் கொள்ளைக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது.

கடைக்குள் உலா வந்த 2 கொள்ளையரும், ஜீன்ஸ் மற்றும் தலையை மறைக்க கூடிய குல்லா கொண்ட ஜெர்க்கின் அணிந்திருந்தனர். மேலும் முகத்தை மறைக்க சிங்கம் மற்றும் முயல் உருவம் கொண்ட மாஸ்க் அணிந்திருந்தனர். 

அவர்கள் அணிந்திருந்த ஜெர்க்கின் புத்தம் புதிது. கொள்ளையடிக்க வரும்போது தான் அணிந்துள்ளனர். எனவே சத்திரம் பஸ் நிலையம், என்எஸ்பி ரோடு, சிங்காரதோப்பு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் கொள்ளையர்களின் படத்தை காட்டி விசாரித்து வந்தனர்.

திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே திருவாரூர் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். . அப்போது வேகமாக வந்த பைக்கை நிறு த்தி விசாரிக்க  முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி க்க முயன்றனர்.

அதில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் மற்றொருவன் தப்பியோடி விட்டான். பிடிப்பட்ட நபரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற மடப்புரம் மணிகண்டன்  என்று தெரியவந்தது. 

இவரிடம் விசாரித்தபோது திருச்சி நகை கொள்ளையில் இவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது. அவன் வைத்திருந்த பையில் இருந்த நகைகளில் இருந்த பார்கோடுகளை ஸ்கேன் செய்துபார்த்தபோது  அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் கொள் ளை போனது என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூட்டாளி திருவாரூரைசேர்ந்த சுரேஷ்  என்பவரை பிடிக்க திருவாரூர் முழுவதும் போலீசார் உஷார் படுத்த ப்பட்டுள்ளனர். சுரேஷை பிடிக்க தனிப்படையினர் அவனது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

click me!