கண்டவளோட திருமணம்.. என்னுடன் உல்லாசமா.. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!

Published : Dec 29, 2020, 04:25 PM IST
கண்டவளோட திருமணம்.. என்னுடன் உல்லாசமா.. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!

சுருக்கம்

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் ஷிபு(39) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.  இந்நிலையில், ஷிபுவுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடுகள் நடந்தன. இதுபற்றி அறிந்ததும் கள்ளக்காதலி ஆத்திரமடைந்தார். வேறு பெண்ணை திருமணம் செய்வதால் என்னை மறந்து விடுவாய். நீ வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றுஷிபுவிடம் தகராறு செய்து வந்தார்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் சமாதனம் செய்வதற்காக கள்ளக்காதலி வீட்டுக்கு ஷிபு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலி ரப்பர் ஷீட் உறைய வைக்கும் ஆசிட்டை எடுத்து ஷிபுவின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த ஷிபு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி வந்தார். 

அதன் பின்னரும் அவரை விடாமல் துரத்தி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த ஷிபுவின் தாயாரும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷிபு மற்றும் அவரது தாயார் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கின்னர், ஷிபு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீசிதில் அவரது கண் பார்வை சேதமடைந்ததாக கூறப்படுவது. இது குறித்து ஷிபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 40 வயது பெண் மற்றும் அவரது 19 வயது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!