அட சீ கருமம் கருமம்... பெற்ற மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை போக்சோவில் கைது..!

Published : Oct 25, 2020, 12:57 PM IST
அட சீ கருமம் கருமம்...  பெற்ற மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை போக்சோவில் கைது..!

சுருக்கம்

தருமபுரி அருகே 10 வயது மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரை தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி அருகே 10 வயது மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரை தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (37), லாரி ஓட்டுநர்.  இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டு வருவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன், மனைவிக்கும் இடையே கண்டை ஏற்படுபோதெல்லாம்  இரு மகள்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு, காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தனலட்சுமி சென்றுவிடுவார். அதன்பின்,  கோபம் தணிந்தவுடன் மீண்டும் திரும்புவார். இதே போல், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு  சென்று விட்டார்.

இதனையடுத்து, தனலட்சுமி வீடு திரும்பிய போது அவரது மகள் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், காரிமங்கலம் காவல் நிலையத்தில் கணவர் மீது கொடுத்த புகாரில், தான் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு  சென்ற சமயத்தில், வீட்டில் இருந்த 10 வயதான 2வது மகளை,  கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார்  சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பாலக்கோடு  அனைத்து மகளிர் போலீசார், சண்முகத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்