வெளிநாட்டு மாணவியோடு உல்லாசம் அனுபவித்த பிரபல தொழிலதிபர்..! கர்ப்பமான நிலையில் தவிக்கவிட்டு தலைமறைவு..!

Published : Oct 17, 2019, 11:56 AM ISTUpdated : Oct 17, 2019, 11:59 AM IST
வெளிநாட்டு மாணவியோடு உல்லாசம் அனுபவித்த பிரபல தொழிலதிபர்..! கர்ப்பமான நிலையில் தவிக்கவிட்டு தலைமறைவு..!

சுருக்கம்

வெளிநாட்டு மாணவி ஒருவரை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய சென்னை தொழிலதிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் ருமையாஸ் அகமது. பிரபல தொழிலதிபரான இவர் அடிக்கடி தொழில் சம்பந்தமாக துபாய் போய் வந்திருக்கிறார். அங்கு பேபி(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேபி, லிதுனியா நாட்டைச் சேர்ந்தவர். படிப்பிற்காக துபாயில் தங்கி இருக்கிறார்.

நண்பர்களாக முதலில் பழகிய இவர்கள் நாளைடைவில் காதலர்களாக மாறி இருக்கின்றனர். பின்னர் திருமணமும் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய அகமது, பேபியோடு உல்லாசமாக இருந்துள்ளார். . இதில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் இருவரும் சென்னை வந்துள்ளனர். அங்கு அகமதுவின் குடும்பத்தார் வற்புறுத்தவதே சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் கருவை கலைத்திருக்கிறார் பேபி. அதன்பிறகு அவரை கொச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

இதில் பேபி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனிடையே அகமது தற்போது பேபியை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. அவரும் அவரது குடும்பத்தினரும் பேபியை தமிழகத்தை விட்டு ஓடி விடுமாறு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இதனால் செய்வதறியாது திகைத்த பேபி, சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் அகமதுவை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது மாணவி பேபி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்