8 ஆண்டு விஜய்யுடன் குடும்பம்!! ஆனால் 2 மாத கள்ளக்காதலை விட முடியவில்லை... அபிராமியின் கொடூர வாக்குமூலம்

Published : Sep 02, 2018, 04:13 PM ISTUpdated : Sep 09, 2018, 08:26 PM IST
8 ஆண்டு விஜய்யுடன் குடும்பம்!! ஆனால் 2 மாத கள்ளக்காதலை விட முடியவில்லை... அபிராமியின் கொடூர வாக்குமூலம்

சுருக்கம்

விஜய்யோடு 8_ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும்,  சுந்தரத்துடன் 2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் தான் இப்படி செய்தேன் என அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியை அடுத்து  குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு  அதேபகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது  இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய்  கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி  பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரும் கணவருக்கு கட்டுப்படாத அபிராமி கடந்த வாரம் இரு குழந்தைகளையும் வீட்டில் தவிக்க விட்டு காதலன் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று இருந்து கொண்டதாகவும் அவரை கெஞ்சி கூத்தாடி கணவர் விஜய் வீட்டுக்கு அழைத்து  வந்துள்ளார்.

கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன்  தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்ட அபிராமி டீ யில் விஷத்தைக் கலந்து கொடு தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இதனையடுத்து, அபிராமியின் காதலனான சுந்தரத்தை  கைது செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் அவர் கேரளாவிற்கு தப்பிச்சென்றாதாக கூறியிள்ளார். இதனைடுத்து  திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு தப்பிச்செல்லும் முயற்சியில் இருந்தபோது கைதான அபிராமியிடம் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு நேற்று இரவு சென்றனர்.  சென்னையில் கைதான சுந்தரத்தையும் உடன் அழைத்துச்சென்றனர்.  காதலன் மூலமாக அபிராமியை பிடிக்க வலை விரித்தனர் போலீசார்.  அதன்படி, செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அபிராமி பேருந்து நிலையத்தில் பிடிபட்டார்.  நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை,  கைது செய்த போலீசார்  அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிராமி வாக்குமூலத்தில், விஜய்யோடு 8_ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும்,  சுந்தரத்துடன் 
2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் இதற்கு என்ன வழி? என்று யோசித்தேன். அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன்.

கடந்த 30-ந்தேதியில் இருந்தே 2 நாட்களாக கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டம் போட்டேன். 30-ந்தேதி இரவிலேயே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். 

ஆனால் மறுநாள் (31-ந்தேதி) காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் 2 பேரும் பிழைத்துக் கொண்டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் 30-ந்தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என்று எண்ணுகிறேன். 

நேற்று முன்தினம் காலையில் கார்னிகா எழும்பாததால் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல விஜய் சென்றார். நான், அதற்கு அனுமதிக்கவில்லை. அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றேன். விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார். இதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்து கொன்றேன். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!