அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!

By Kanmani P  |  First Published Jul 27, 2022, 12:39 PM IST

கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவார கொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார்.


தெலுங்கு சூப்பர் ஹீரோ விஜய் தேவாரகொண்டா தற்போது லிகர் என்னும் படத்தில் நடித்துள்ளார். அனன்யா பாண்டே நடித்துள்ளார். பிளாக் பாஸ்டர் படங்களை தெலுங்கிற்கு கொடுத்த பூரி ஜெகன்நாத் லிகர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாங் ஹோவர்  படத்தில் முன்னதாக நடித்திருந்த இவர் முதல்முறையாக லிகர் மூலம் இந்திய படத்தில் என்ட்ரி கொடுக்கிறார். நாயகன் ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம் எம் ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதே இந்த படத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் இதன் பிரமோஷன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மிகவும் சாதரணமாக உடையணிந்து,  சாத செருப்புகள் அணிந்து வருகை கொடுத்திருந்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில்  ஆழ்த்தியிருந்தது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...பைக் உலாவை தொடர்ந்து வைரலாகும் அஜித்தின் ரைபிள் கிளப் வீடியோ !

 

மேலும் செய்திகளுக்கு....மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் போட்டோஸ்..

அதேபோல அனன்யா ஒரு சால்வை துணியை உடலில் சுற்றியது போன்ற அலங்காரத்துடன் கவர்ச்சியை அள்ளி தெளித்தார். இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்  விஜய் தேவரகொண்டா ,அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோஹரின், காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சமந்தா,அக்ஷய் குமார் கலந்து கொண்ட ப்ரோமோக்களும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

 இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் விஜய் தேவார கொண்டா மற்றும் அனன்யா பாண்டே கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான கேள்விகளை கரண்  பேசியது சர்ச்சை எழுப்பியிருந்த நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா குறித்த கிசுகிசுக்களையும் வெளியேற்றுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு....சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே

கரண் ஜோஹரின் அந்த ப்ரோமோவில்,  கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவார கொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார்.  இறுதியில் கார் என்கிறார் நாயகன். அதற்கு காருக்குள் மூவருமா கேள்வி எழுப்புகிறார் கரண். இல்லை என மறுப்புரைக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வீடியோ காபி வித் கரன் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது. ஆனால் விஜய் தேவார கொண்டாவின் பர்சனல் லைப் குறித்த கரணின் கேள்வி நிச்சயம் சர்ச்சையை உண்டாக்கும் என கூறப்படுகிறது.


 

Serious question - do you like 🧀? Then you'll love Episode 4 of , streams from this Thursday only on Disney+ Hotstar. pic.twitter.com/omxqi1NyBO

— Karan Johar (@karanjohar)

 

click me!