டிக்டாக்கில் கலக்கிய கவர்ச்சி கொரோனா! ஆட்டம்போட்ட இலக்கியாவை தாக்கிய வைரஸ்! ட்ரீட்மெண்டுக்காக போலீசிடம் புகார்

By manimegalai aFirst Published Mar 17, 2020, 2:22 PM IST
Highlights

டிக் டாக் செயலில் மூலம், இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய பலர், டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர்.
 

டிக் டாக் செயலில் மூலம், இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய பலர், டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர்.

அந்த வகையில், கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக் டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாகியுள்ளனர் டிக் டாக் பிரபலம் இலக்கியா.

எதிர்பார்த்ததை விட லைக்குகள் எகிற, ஆண்களுக்கே வெட்கம் வரும் அளவிற்கு, கவர்ச்சி உடை அணிந்தபடியும், மது பாட்டில்களிடனும், சிகரெட் பிடித்தபடி பல டிக் டாக்குகளை வெளியிட்டுள்ளார். காதில் கூசும் இரட்டை அர்த்தம் கொண்ட டயலாக்குகளுக்கு நடித்து காட்டுவதில் அம்மணி அம்புட்டு ஃ பேமஸ்.

மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் செய்த யாஷிகா? பல இடங்களில் ஒன்றாக திரிந்த புகைப்படங்கள் லீக்!

ஆற்றில் ஓடும் தண்ணீர் போல, அடுக்கடுக்காக இலக்கிய போடும் டிக் டாக் வீடியோவை வைத்து ஏன் காசு பார்க்க கூடாது என எண்ணிய மர்மநபர்கள், இவருடைய பெயரில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி, அதில் இலக்கியா வெளியிடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், லைவ் சாட்டிங்கில் வருவதாக கூறி... இலக்கியாவை பின்தொடர்ந்து வரும் பலரிடம், ரூ 5000 வீதம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கடைசி வரை இலக்கியா லைவ் சாட்டிங்கில் வராததால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

மேலும் செய்திகள்: பெண் குழந்தைக்கு தாயான ராதிகாவின் மகள் ரேயான்! பிரபலங்கள் வாழ்த்து!

எமர்த்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? இலக்கியவை, வாயில் வரும் வார்த்தைகளையெல்லாம் கூறி வசை பாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் இலக்கிய இதை கண்டு அதிர்ச்சியடைந்து மட்டும் இன்றி, மனஉளைச்சலுக்கு ஆளானார். 

அதே நேரம், தன்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு... சிலர் மோசடி செய்வதாகவும் கூறி டிக் டாக் பதிவுகளை வெளியிட்டார். இவரின் இந்த செயலும் ஏமாற்று வேலை தான் என கொரோனோவை விட வேகமாக இவர் மீது பணித்துள்ளார் பயனாளிகள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, தன்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கி பணம் பறித்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் நிலையத்தில் இலக்கியா பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இதில், தன்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் பறித்தவர்களை, கண்டுபிடித்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த ட்ரீட்மென்ட் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

click me!