பிரபல காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் செய்தாரா யாஷிகா? பல இடங்களில் ஒன்றாக திரிந்த புகைப்படங்கள் லீக்!
அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கண்டங்களுக்கு ஆளாகி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த முறை தேசிய விருது பெற்ற நடிகரின் மகனுடன் பல்வேறு இடங்களில் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்களில் இவர்கள் இருவரும், வெவ்வேறு கெட்டப்பில் உள்ளதால், டேட்டிங் செய்த போது எடுக்கப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
யாஷிகா டேட்டிங் செய்ததாக கூறப்படுவது வேறு யாரும் இல்லை பாஸ், பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் தான்.
உமாபதி, தமிழில் அதாகப்பட்டது மகா ஜனங்களே, மற்றும் திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இது வரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்த உமாபதி முதல் முறையான யாஷிகாவின் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.
மேலும் விதவிதமாக கெட்டப்புகளில் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. எனினும்,'மணியார்' குடும்பம் படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்த போது, எடுத்து கொண்டது என்றும் கூறப்படுகிறது.
உண்மை எது என்பது தெரியாமல் புரளியை கிளப்ப வேண்டாம் என, இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்களாம்.