நடிகை தமன்னா பாட்டியா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் பரவி வரும் நிலையில், தமன்னா மேகசீன் ஒன்றிற்கு ஹாட் உடையில் எடுத்து கொண்ட, சில வீடியோ கிளுப்புகளை வெளியிட, இதற்கு விஜய் வர்மா போட்ட பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பட தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவல் வெளியானது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வந்த தமன்னாவுக்கு, தலைவரின் படம் சிறந்த கம் பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 வயதை கடந்துவிட்ட நடிகைகள் லிஸ்டில், தமன்னா இணைந்து விட்டதால் என்னவோ... அடிக்கடி இவரின் திருமண பேச்சுகளும், காதல் குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், பிஸ்னஸ் மேன் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வதந்தி பரவிய போது, இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தமன்னா முற்றுப்புள்ளி வைத்ததோடு, படங்கள் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.
எனினும் தமன்னா, பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தற்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்களும், கோவாவில் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொண்டு, கவர்ச்சி உடையில்... விஜய் வர்மாவுக்கு முத்தம் கொடுத்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது வரை இதுகுறித்து வாய் திறக்காத தமன்னா, 'பர்ஸ்ட் லுக் மேகசின் ஒன்றிற்காக வித விதமான சிவப்பு நிற உடையில், எடுத்துக்கொண்ட கவர்ச்சி போட்டோஷூட் வீடியோ கிளுப்புகளை வெளியிட, நடிகர் விஜய் வர்மா செம்ம ஹாட் என நெருப்பு கொழுந்து விட்டு எரியும் எமோஜி போட்டு கமெண்ட் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் விரைவில் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ' இல் இயக்குனர் சுஜோய் கோஷின் இயக்கத்தில் விஜய் வர்மா மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிது. இந்த அந்தாலஜி தொகுப்பிற்கான குறும்படங்களை ஆர் பால்கி, கொங்கோனா சென் சர்மா, சுஜோய் கோஷ் மற்றும் அமித் ரவீந்தர்நாத் சர்மா ஆகியோர் இயக்க உள்ளனர். லஸ்ட் ஸ்டோரிஸின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு Netflix இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னாவின் ஹாட் வீடியோ இதோ...