VJ Maheshwari : கோடை விடுமுறையை தாய்லாந்து நாட்டில் பொது கழித்து வருகின்றார் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி மஹேஸ்வரி.
சென்னையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே தனது பட்டப் படிப்பை முடித்தவர் தான் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான மகேஸ்வரி. கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் உருவான "மந்திர புன்னகை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை மகேஸ்வரி தொடங்கினார்.
அதே ஆண்டு சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் தொகுப்பாளியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு "சென்னை 28", "பியார் பிரேமா காதல்", "ரைட்டர்", சிவகார்த்திகேயனின் "டான்" மற்றும் லோகேஷ் கனகராஜின் "விக்ரம்" போன்ற பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.
அதேபோல அவருடைய நடிப்பில் "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" என்கின்ற திரைப்படமும் தற்பொழுது உருவாகி வருகிறது. திரைத்துறையில் பயணிக்கும் அதே நேரம், சின்னத்திரையிலும் "புதுக்கவிதை", "தாயுமானவன்" மற்றும் "அம்மன்" போன்ற பல நாடகங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, 35வது நாளில் இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகேஸ்வரிக்கு ஒரு குழந்தை உள்ளார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தனது கணவரை பிரிந்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் மகேஸ்வரி, ஒரு ஆடை வடிவமைப்பாளர் என்பது பலரும் அறிந்திடாத உண்மை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை பொறுப்பெடுத்தாமல், ஆடை சுதந்திரம் தனக்கானது என்று கூறி நகர்ந்து செல்லும் ஒரு போல்ட் பெண்ணாக மகேஸ்வரி திகழ்ந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்த கோடை விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள மகேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.