ஜோஹோ நிறுவனம் டெக்னிக்கல் சப்போர்ட் என்ஜினீயர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பணிக்கு இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். விரிவான தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நிறுவனத்தின் இணையதளம்: www.zoho.com
வேலை: டெக்னிக்கல் சப்போர்ட் என்ஜினீயர்
தகுதி: இளங்கலை / முதுகலை அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
அனுபவம்: தேவையில்லை
பணியிடம்: சென்னை
சம்பளம்: INR 6.8 LPA (எதிர்பார்க்கப்படுகிறது)
கடைசி தேதி: இன்று.
ஜோஹோ வேலை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்த பணிக்கு தேர்வானவர்கள் வாடிக்கையாளர்கள் இடையே தொடர்பு கொள்ள வேண்டும். கால், மின்னஞ்சல் மற்றும் சாட் சப்போர்ட் செய்ய வேண்டும். பயனர்களின் தேவைகளை ஆராய்ந்து புரிந்துகொண்டு சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும். தயாரிப்பு டெமோக்கள், செயல்படுத்தல் மற்றும் பயிற்சி ஆகியவற்றைக் கையாள வேண்டும்.
இரவு ஷிப்ட் மற்றும் ரொட்டேஷன் ஷிப்ட்களுடன் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்,. 2024 இல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள். பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே அடுத்த சுற்றுகள் குறித்து அறிவிக்கப்படும். பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 6, 2024 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் Zoho-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?