சென்னையில் அரசு வேலை: ICMR-NIE-ல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு!

Published : Feb 26, 2025, 06:27 PM IST
சென்னையில் அரசு வேலை:  ICMR-NIE-ல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு!

சுருக்கம்

சென்னையில் மத்திய அரசு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

என்னென்ன வேலைகள்? சம்பளம் எவ்வளவு?

  • கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk): குரூப்-சி வேலை, மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம். ஏழு இடங்கள் உள்ளன.
  • மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk): குரூப்-சி வேலை, மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம். இரண்டு இடங்கள் உள்ளன.
  • உதவியாளர் (Assistant): குரூப்-பி வேலை, மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம். ஒரு இடம் உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான icmr.gov.in மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இணையதளமான www.nie.gov.in ஆகியவற்றைப் பார்வையிடவும். ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணைப்பு மற்றும் கடைசி தேதி விரைவில் இணையதளங்களில் வெளியிடப்படும்.

முக்கிய குறிப்பு: விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ICMR/நிறுவன இணையதளத்தில் கிடைக்கிறது. விளம்பரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை ICMR/நிறுவன இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10th முடித்தவர்களுக்கு அட்டகாச வாய்ப்பு.! கப்பல் கட்டும் தளத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி!
Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்