போட்டித் தேர்வு கனவா? இனி கவலையை விடுங்க! தமிழ்நாடு அரசு உங்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
போட்டித் தேர்வு கனவா? இனி கவலையை விடுங்க! தமிழ்நாடு அரசு உங்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிகிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஊக்கத்தொகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை:
இந்தியாவின் உயரிய அரசுப் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றுக்கான யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு, நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்தத் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று முக்கிய கட்டங்களை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டிலிருந்து குடிமைப் பணிகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக, தமிழக அரசு இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் 1000 இளைஞர்களுக்கு, முதல்நிலைத் தேர்வுக்கு தயாராக 10 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதன்மைத் தேர்வுக்காக ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.தற்போது, முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து குடிமைப் பணிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வுக்கு ஏன் இந்த ஊக்கத்தொகை?
யுபிஎஸ்சி தேர்வு இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்று. இதற்கு அதிக நேரம் மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை இளைஞர்களுக்கு நிதிச் சுமையை குறைத்து, தேர்வில் கவனம் செலுத்த உதவும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து அதிக இளைஞர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதை ஊக்குவிக்கும்.
இந்த அறிவிப்பு யாருக்கெல்லாம் மகிழ்ச்சி?
இந்த அறிவிப்பு மூலம் என்ன பயன்கள்?
தமிழ்நாடு அரசின் இந்த சூப்பர் அறிவிப்பு, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் கனவுகளை நனவாக்க வேண்டும்.