யூனியன் வங்கியில் 2,691 காலி பணியிடங்கள்! தமிழகத்துக்கு எத்தனை இடங்கள்? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Feb 25, 2025, 02:30 PM IST
யூனியன் வங்கியில் 2,691 காலி பணியிடங்கள்! தமிழகத்துக்கு எத்தனை இடங்கள்? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 2,691 பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், மார்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வருட பயிற்சிக்கு மாதம் ரூ.15,000 சம்பளம்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா (UBI) என்பது, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இது, மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 8,500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  இந்த வங்கியில் 2,691 காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி மற்றும் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம். 

மொத்த காலி பணியிடங்கள்:

நாடு முழுவதும் மொத்தம் 2,691 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 122 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. 

கல்வித் தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

வயது வரம்பை பொறுத்தவரை 20 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் கீழ் காணும் பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு. எஸ்.சி மற்றும் எஸ்..டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம் : 

இந்த பயிற்சி பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். மாதம் ரூ. 15,000 சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம்:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 800 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் ரூ.600 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டணமாகும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். அதாவது எந்தெந்த மாநில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்றோமோ அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் பயிற்சி தளமான https://nats.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை தெரிந்து படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

மார்ச் 5

PREV
click me!

Recommended Stories

Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Training: அட்டகாசமான வாய்ப்பு.! 8th முடித்திருந்தால் போதும்.! ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.!