ஆசிரியர் பணிக்கான டெட் (TET) இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் பணிக்கான டெட் (TET) இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.
அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்காக டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கான ஆசிரியர் பணிகளுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. இதில் 2வது தாள் தேர்வு ஆன்லைன் மூலம் கடந்த பிப்ரவரி 3 முதல் 15 வரை நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த மாதம் முடிவடைந்த 2ஆம் தாள் தேர்வு முடிவுகள் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. https://trb.tn.nic.in/ மற்றும் https://www.trb.tn.gov.in/ ஆகிய இரண்டு அதிகாரபூர்வ இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
6 முதல் 8 வகுப்புகளுக்கான ஆசிரியர் பணிகளுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு சென்ற பிப்ரவரியில் நடத்தி முடிக்கப்பட்டது.