தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பல்வேறு சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.07.2023 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள் விவரம்:
1. ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல்) - 01
2. ஆராய்ச்சி உதவியாளர் (பொருளியல்) - 01
3. ஆராய்ச்சி உதவியாளர் (புவியியல்) - 01
4. ஆராய்ச்சி உதவியாளர் (சமூகவியல்) - 01
சம்பள விவரம்
ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.36,200 – ரூ.1,33,100 வரை
காலிப் பணியிடங்கள் விவரம்:
5. ஆராய்ச்சி உதவியாளர் (Evaluation and Applied Research Department) - 02
சம்பள விவரம்
மாதம் ரூ.36,900 – 1,16,600 வரை
கல்வித்தகுதி
சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC, SC(A), ST, MBC / DC, BC(OBCM), BCM மற்றும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?
தேர்வு செய்யப்படும் முறை
கணினி வழித்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், வேலூர்
விண்ணப்பக் கட்டணம்
பதிவிக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
www.tnpsc.gov.in என்ற முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.07.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் தொடர்பான (Recruitment notification) கூடுதல் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.