TNPSC: இண்டர்வியூ இல்லை, 615 காலி பணியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!!

Published : May 21, 2025, 05:36 PM ISTUpdated : May 22, 2025, 06:47 PM IST
TNPSC Notification 2025

சுருக்கம்

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பை 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களுடன் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 27 - ஜூன் 25, 2025 வரை tnpsc.gov.in இல் திறந்திருக்கும்.

TNPSC Notification 2025

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் குடிமையியல் பணிகள் தொழில்நுட்ப பணிகள் ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு தேர்தல் வர இருப்பதால் இந்த ஆண்டிற்குள் பல தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், இன்று 615 பணியிடங்கள் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

47 பதவிகள், 615 காலி பணியிடங்கள் 

இந்த தேர்வின் மூலம் உதவிப் பொறியாளர், மின்னியல், வேளாண் பொறியியல், அமைப்பியல் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 27-05-2025 முதல் 25-06-2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழி தேர்வு 04-08-2025 முதல் 10-08-2025 வரை நடைபெறும்.

காலி இடங்கள் மேலும் அதிகரிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிப்பில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை, அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாவிற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதிகள் என்ன?

உதவிப் பொறியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், லைப்ரரியன், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர், ஜூனியர் பிளானர், புள்ளியல் உதவியாளர் என 47 வகையான பணியிடங்களுக்கு 617 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கு 29-06-2025 முதல் 10-08-2025 வரை அவகாசம் வழங்கப்படும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் எழுத்து தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு இல்லாமலேயே குடிநீர் வடிகால் வாரியம் உட்பட பல துறைகளில் பொறியாளராக பணியாற்ற முடியும்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!