
குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) சார்பில், இளைஞர் நீதி குழுமங்களின் கீழ் சில பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
Assistant – Bench Clerk (உதவியாளர் )
Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர்)
Office Assistant (அலுவலக உதவியாளர்)
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகளில் செங்கல்பட்டு, திருவாரூர், திருவள்ளூர், விருதுநகர், இராமநாதபுரம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்துக்கு ஏற்ப காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மாறுபடும். அதேபோல், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பக் கடைசி தேதி மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது.
முக்கிய குறிப்பு: மாவட்டத்திற்கு மாவட்டம் விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, தகுதி மற்றும் பிற விதிமுறைகளில் மாற்றங்கள் இருக்கலாம். எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாகப் படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பிப்பது அவசியம்.
பொதுவாக இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பில் வழக்கமான எழுத்துத் தேர்வு இல்லை. தகுதிச்சான்றுகள் பரிசீலனை/Shortlisting மற்றும் நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளத்திற்கு சென்று Notification மற்றும் Application Form-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றுகளுடன் குறிப்பிட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.