
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) ஸ்டெனோகிராஃபர் கிரேடு C மற்றும் D பதவிகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்கள், எஸ்.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in-ல் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்.
மொத்தம் 35,955 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கிரேடு C-க்கு 9,345 மாணவர்களும், கிரேடு D-க்கு 26,610 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,006 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது.
தேர்வு செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டது: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு. தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எஸ்.எஸ்.சி ஸ்டெனோகிராஃபர் 2024-25 முடிவுகளை எப்படி சரிபார்ப்பது?
கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டெனோகிராஃபி திறன் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இது ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்கள் அல்லது நியமிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும். கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்திறனின் அடிப்படையில் இறுதி தேர்வு செய்யப்படும்.