
தென்காசி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியார், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பதற்கான விண்ணப்ப செயல்முறை 31.01.2025 முதல் தொடங்கியது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.02.2025 கடைசி நாளாகும்.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.மாத சம்பளமாக ரூ 8,000 வரை வழங்கப்படும்,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கவும்
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் பதவிக்கு பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும், கணினியில் M.S Office அனுபவப் பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ 15,000 வரை வழங்கப்படும், வயது 21 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://tenkasi.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
2.31 லட்சம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் தகவல்
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், (சத்துணவு பிரிவு) அலுவலகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தென்காசி – 627 811..
விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 31-01-2025.
விண்ணப்பக்க கடைசி நாள்: 15-02-2025.