இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! உடனே அப்ளை பண்ணுங்க ப்ரோ!

By SG Balan  |  First Published Jul 8, 2024, 11:10 PM IST

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்டக் கலெக்டர் அறிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 வரை உதவித்தொகை பெறலாம்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித்தொகை முடியும். 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இந்த உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.

Latest Videos

undefined

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.300 கொடுக்கப்படும். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும். ஆனால் இந்தத் தொகை காலாண்டிற்கு ஒருமுறை மொத்தமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு முடித்திருந்தாலே இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது வரம்பு கிடையாது. ஆனால், தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களுக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை பெற முடியாது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 கிடைக்கும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 கிடைக்கும். பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறளாளியாக இருந்தால் ரூ.1000 மாத உதவித்தொகை கிடைக்கும்.

இத்திட்டத்தில் விண்ணபிப்பது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

"வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை வேலை நாட்களில் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு கழித்து, 2,3-ம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தவுடன் அதனை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவை புதுப்பிக்க தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது"

இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்

click me!