மத்திய அரசுப் பணிகளில் 3,134 காலியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியீடு!

Published : Jun 24, 2025, 05:45 PM ISTUpdated : Jun 24, 2025, 05:46 PM IST
Staff Selection Commission

சுருக்கம்

எஸ்.எஸ்.சி ஆணையம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3,134 காலிப் பணியிடங்களை நிரப்புகிறது. LDC, JSA, DEO உள்ளிட்ட பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission - SSC), மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்களின் விவரம்:

லோயர் டிவிஷன் கிளர்க் (Lower Division Clerk - LDC), ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் (Junior Secretariat Assistant - JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator - DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ (Data Entry Operator Grade A) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3,134 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதப் பாடப்பிரிவு எடுத்துப் படித்திருப்பது அவசியம். எல்.டி.சி மற்றும் பிற பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு:

18 வயது நிரம்பியவர்களும், 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.)

சம்பளம் எவ்வளவு?

பணிக்குத் தகுந்தபடி சம்பளம் மாறுபடும். அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ. 29,200 முதல் ரூ. 92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். (சில பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு).

தேர்வு முறை:

கணினி வழியில் இரண்டு கட்டத் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.07.2025 ஆகும்.

மேலும் விரிவான தகவல்களை அறிய, எஸ்.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in ஐ பார்வையிடவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!