எஸ்.பி.ஐ வங்கியில் எழுத்தர் எனப்படும் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை என்னென்ன ? என்று இப்பதிவில் காணலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,008 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 355 காலிப்பணியிடங்கள் உள்ளன.
எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 07 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றே இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
இன்னும் இதற்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை நாளை இன்று (செப்டம்பர் 27, 2022) மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள 15 வெவ்வேறு வட்டங்களில் காலியாக உள்ள எழுத்தர் கேடரில் 5,000+ ஜூனியர் அசோசியேட் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.
வழக்கமான காலியிடங்களின் கீழ் 5008 கிளார்க் பணியிடங்களுக்கும், 478 பதவிகள் பின்னடைவு காலியிடங்களுக்கும் எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒரு மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்பிஐ கிளார்க் முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2022 இல் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு/செமஸ்டரில் இருப்பவர்களும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டால், ஆகஸ்ட் 16 ஆம் தேதி அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள் :
குஜராத் - 353
டாமன் & டையூ - 4
கர்நாடகா - 316
எம்பி - 389
சத்தீஸ்கர் - 92
WB - 340
ஏ&என் தீவுகள் - 10
சிக்கிம் - 26
ஒடிசா - 170
ஜம்மு & காஷ்மீர் - 35
ஹரியானா - 5
ஹெச்பி - 55
பஞ்சாப் - 130
தமிழ்நாடு - 355
பாண்டிச்சேரி - 7
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
டெல்லி - 32
உத்தரகாண்ட் - 120
தெலுங்கானா - 225
ராஜஸ்தான் - 284
கேரளா - 270
லட்சத்தீவு - 3
UP - 631
மகாராஷ்டிரா - 747
கோவா - 50
அசாம் - 258
AP - 15
மணிப்பூர் - 28
மேகாலயா - 23
மிசோரம் - 10
நாகாலாந்து - 15
திரிபுரா - 10
விண்ணப்பதாரர்கள் (பொது/ OBC/ EWS) ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணத்தில் இருந்து தளர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை செலுத்திய கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் எந்தக் கணக்கிலும் திருப்பித் தரப்படமாட்டாது அல்லது வேறு எந்தத் தேர்வுக்கும் அல்லது தேர்வுக்கும் கையிருப்பில் வைத்திருக்க முடியாது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bank.sbi/careers என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கலாம்.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!