
RITES Ltd நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, மொத்தம் 400 Assistant Manager பணியிடங்களை நிரப்பவுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த பொறியியல் மற்றும் ஆலோசனைச் சேவை நிறுவனம் Civil, Mechanical, Electrical, S&T, Metallurgy, Chemical, IT, Food Technology மற்றும் Pharma போன்ற முக்கிய தொழில்துறைகளில் பணியிடங்களை அறிவித்துள்ளது.
குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் தேவை
ஒவ்வொரு பதவிக்கும் சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகளில் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் அவசியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 டிசம்பர் 2025 நிலவரப்படி அதிகபட்ச வயது 40 ஆகும். அரசு விதிகளின்படி SC/ST, OBC, PwBD மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு வயது தளர்வு கிடைக்கும். விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹23,340 கிராஸ் சம்பளத்துடன், வருடச்சம்பளமாக சுமார் ₹5,09,741 வரை வழங்கப்பட உள்ளது.
கட்டணம் Online Payment மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும்
தேர்வு முறையில் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிக்கும்வர்களுக்கு தேர்வு மையமாக சென்னை குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் SC/ST/EWS/PwBD விண்ணப்பதாரர்களுக்கு ₹600, மற்றவர்களுக்கு ₹300 என வகுக்கப்பட்டுள்ளது. கட்டணம் Online Payment மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 26 நவம்பர் 2025 முதல் 25 டிசம்பர் 2025 வரை நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான **https://rites.com/**-ஐத் திறந்து, தேவையான ஆவணங்களுடன் Online Application Form-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் தகுதி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு ஆகியவற்றை கவனமாகப் படித்துப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமானது.
இந்தியா முழுவதும் பணியிடங்கள் இருப்பதால், நாட்டின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற தயாராக உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை ஒரு முக்கிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். RITES நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு மருத்துவ காப்பீடு, PF, TA/DA போன்ற கூடுதல் நன்மைகளையும் பெறுவார்கள். எனவே இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் காலக்கெடு முடிவதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.