ஆர்பிஐ என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி 66 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆலோசகர்கள்/ சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட்கள்/ ஆய்வாளர்கள் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rbi.org.in ஐ மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 11, 2023 ஆகும். படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அல்லது கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் போன்றவற்றைச் செலுத்துதல் போன்றவை இருந்தால் http://cgrs.ibps.in என்ற இணைப்பின் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
undefined
காலியிடங்கள்
டேட்டா சயின்டிஸ்ட்: 3 பணியிடங்கள்
டேட்டா இன்ஜினியர்: 1 பணியிடம்
IT பாதுகாப்பு நிபுணர்: 10 பணியிடங்கள்
ஐடி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்- தகவல் தொழில்நுட்பத் துறை: 8 பணியிடங்கள்
தகவல் தொழில்நுட்பத் திட்ட நிர்வாகி- -தகவல் தொழில்நுட்பத் துறை: 6 பணியிடங்கள்
நெட்வொர்க் நிர்வாகி: 3 பணியிடங்கள்
பொருளாதார நிபுணர் (மேக்ரோ எகனாமிக் மாடலிங்): 1 பணியிடங்கள்
தரவு ஆய்வாளர் (அப்ளைடு கணிதம்):1 பணியிடம்
தரவு ஆய்வாளர் (Applied Econometrics): 2 பணியிடங்கள்
தரவு ஆய்வாளர் (TABM/HANK மாதிரிகள்): 2 பணியிடங்கள்
ஆய்வாளர்(கிரெடிட் ரிஸ்க்): 1 பணியிடம்
ஆய்வாளர் (சந்தை ஆபத்து): 1 பணியிடம்
ஆய்வாளர் (லிக்விடிட்டி ரிஸ்க்): 1 பணியிடம்
மூத்த ஆய்வாளர் (கிரெடிட் ரிஸ்க்): 1 பணியிடம்
சீனியர் ஆய்வாளர் (சந்தை ஆபத்து); 1 பணியிடம்
மூத்த ஆய்வாளர் (லிக்விடிட்டி ரிஸ்க்): 1 பணியிடம்
ஆய்வாளர் (Stress Testing): 2 பணியிடங்கள்
ஆய்வாளர் (அந்நிய செலாவணி & வர்த்தகம்): 3 பணியிடங்கள்
IT – Cyber Security Analyst: 8 பணியிடங்கள்
ஆலோசகர் - கணக்கியல்: 3 பணியிடங்கள்
IT திட்ட நிர்வாகி-அரசு மற்றும் வங்கி கணக்குகள் துறை: 3 பணியிடங்கள்
DICGC - காலியிடங்கள்
ஆலோசகர் - கணக்கியல் / வரி: 1 பணியிடம்
வணிக ஆய்வாளர்: 1 பணியிடம்
சட்ட ஆலோசகர்: 1 பணியிடம்
ஐடி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்: 1 பணியிடம்
கல்வித் தகுதி
டேட்டா சயின்டிஸ்ட் பணிக்கு புள்ளியியல்/ பொருளாதார அளவியல்/ கணிதம்/ கணிதப் புள்ளியியல்/ தரவு அறிவியல்/ நிதி/ பொருளாதாரம் ஆகியவற்றில் முதுநிலை தேவை. (அல்லது) அரசு அமைப்புகள் / AICTE அல்லது அதுபோன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகம் / நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியலில் BE/B.Tech தேவைப்படும். ஆலோசகர் - கணக்கியல் பதவிக்கு தகுதி பெற்ற பட்டய கணக்காளர்கள் தேவைப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தேர்வு முறை
மேற்கூறிய பணிகளுக்கான தேர்வு ஆர்பிஐ விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறும். மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே பகிரப்பட்டுள்ள விரிவான அறிவிப்பின் மூலம் தகுதி அளவுகோல் மற்றும் தேர்வு செயல்முறையை சரிபார்க்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.rbi.org.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வேறு எந்த முறையும் இல்லை. விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது, மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காத்திருக்கும் அரசு வேலை.. முழு விபரம்