பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம்! பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

By SG Balan  |  First Published Aug 6, 2023, 2:37 PM IST

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 3,094 பேருக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


பிரதரின் கல்வி உதவித் தொகை திட்டம் (PM Young Achievers Scholarship Award) மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 3,094 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

https;//yet.nta.ac.in என்ற அதிகாரபூர்வ இணையளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் படித்தவர்கள் தான் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். மேலும், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

undefined

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் விடுபட்டவர்களுக்கு எப்போது வழங்கப்படும்? ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் 9ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.75,000 உதவித்தொகை கொடுக்கப்படும். 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (PM-YASAVI) பெற்ற தகுதியின் அடிப்படையில் உதவித்தொகைக்கு உரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த உதவித்தொகை வேண்டும் என்றால் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 12ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை சமர்ப்பித்த விண்ணப்பத்தில் திருத்தம் முடியும். செப்டம்பர் 29ஆம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறும். https://yet.nta.ac.in, https://socialjustice.gov.in ஆகிய இணையதளங்களில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் நியாயமற்றவை என கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எவ்ளோ தாகம் எடுத்தாலும் இதை மட்டும் செய்யாதீங்க... 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் சாவு!

click me!