Jobs Alert: வேலை தேடுறீங்களா.! இன்றே கடைசி நாள்.! மறக்காம Apply பண்ணுங்க.!

Published : Aug 07, 2025, 08:30 AM IST
Top 5 Govt Jobs Lats Date 2025

சுருக்கம்

இந்திய ரயில்வே, இந்தியன் வங்கி மற்றும் விருதுநகர் DHS ஆகிய மூன்று முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கான கடைசி நாள் இன்று. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்! வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பு. மூன்று முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இன்றுடன் முடிவடைகின்றன. உங்களுக்குத் தகுதி இருந்தால், இந்த வாய்ப்புகளை இழக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.

முதலாவதாக, RRB Technician Recruitment 2025 என்பது இந்திய ரயில்வே துறையின் மிகப்பெரிய நியமனமாகும். மொத்தம் 6180 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துறையில் பணியாற்ற விரும்பும் ITI, டிப்ளோமா, B.E/B.Tech மற்றும் B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இது உங்கள் தொழில்நுட்பத் திறமைகளை பயன்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள் 07.08.2025 ஆகும். விண்ணப்ப லிங்க்: RRB Technician இணையதளம்

இரண்டாவதாக, Indian Bank Recruitment 2025 மூலம் 1500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பட்டம் (Any Degree) பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வங்கித் துறையில் பணியாற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் இதுவே: 07.08.2025. விண்ணப்ப லிங்க்: Indian Bank இணையதளம்

மூன்றாவதாக, Virudhunagar DHS Recruitment 2025 மூலம் மாவட்ட சுகாதார துறையில் 76 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Pharmacist, Health Inspector Grade II, Lab Technician Grade III, மற்றும் Multi-Purpose Hospital worker பணிகள் அடங்கும். 8ம் வகுப்பு முதல், DGNM, B.Sc Nursing, D.Pharm/B.Pharm, மற்றும் MLHP, HI, SI கம்பீன் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது உங்கள் சமூக சேவையை வலுப்படுத்தும் அரிய வாய்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2025. விண்ணப்ப லிங்க்: Virudhunagar DHS இணையதளம்

இன்றுடன் இந்த மூன்று பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு முடிவடைகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!