இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு, தற்போது தகுதியான இளைஞர்கள் வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அக்னி வீரர்கள், அதாவது போர் அல்லாத பிற பணியிடங்களில் பணியாற்ற மத்திய அரசால் நியமிக்கப்படும் பதவி தான் அக்னிவீர்வாயு. தற்போது இந்திய விமானப்படையில் பணியாற்ற அக்னிவீர்வாயு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேவைப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
undefined
ஆன்லைன் மூலம் இந்திய விமானப் படையின் (https://agnipathvayu.cdac.in/) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வருகிற 27ம் தேதி ஜூலை 2023, முதல் 17ம் தேதி ஆகஸ்ட் 2023 வரை இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
தேர்வுகள் எப்போது?
இதற்கான ஆன்லைன் தேர்வுகளும் அக்டோபர் மாதம் 13ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
அக்னிவீர்வாயு பதவிக்கு திருமணம் ஆகாத ஆண்களும் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு
27 ஜூன் 2003 முதல் 27 டிசம்பர் 2006ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்ய முடியும். (மேலே குறிப்பிட்டுள்ள இரு தேதிகளும் அதில் அடக்கம்)
கல்வி தகுதி
பத்தாம் மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் அப்ளை செய்யலாம், அல்லது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ கோர்ஸ் படித்தவர்கள் அப்ளை செய்யலாம். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!