
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் சென்னை, திருவொற்றியூரில் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 25.10.2025 ஆகும்.
இந்த வேலைவாய்ப்பில் பல்வேறு தகுதிகளுக்கு ஏற்ப பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
• அலுவலக உதவியாளர்: இந்தப் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. அடிப்படைத் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதச் சம்பளமாக ₹12,600 முதல் ₹39,900 வரை வழங்கப்படுகிறது.
• சுயம்பாகி (சமையலர்): இந்தப் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், திருக்கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருப்பதும், பூஜை, சடங்குகளை நடத்துவதற்கான நடைமுறைகளை அறிந்திருப்பதும் அவசியம். சம்பளம்: ₹13,200 முதல் ₹41,800 வரை.
• காவலர்: இந்தப் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ₹10,000.
• தோட்ட வேலை: இந்தப் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ₹11,600 முதல் ₹36,800 வரை.
இந்த அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை! மேலும், தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.09.2025 ஆகும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் அல்லது ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்டோபர் 25, 2025 மாலை 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில்,
அலுவலக இருப்பு:- அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் சென்னை-19
காலக்கெடு முடிந்த பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, தகுதியுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.