ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் அரசு வேலை! IISc, NTPC வெளியிட்ட அறிவிப்பு - அப்ளை பண்ணுங்க

Published : Oct 05, 2025, 11:03 AM IST
GovtJob

சுருக்கம்

இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஆகியவை பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கின்றன.

நீண்ட நாட்களாக அரசு வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நீங்களா? உங்களுக்கான செய்தி தான் இது. இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூருவில் உள்ள Instrumention & Applied Physics துறையில் ஆராய்ச்சி திட்டத்துக்காக Project Assistant ஒருவரை நியமிக்க வேண்டும். இது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும்.

கல்வித் தகுதி

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து கணினி அறிவியல் அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். புதிய ஆராய்ச்சி உத்திகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அது மேலதிகமாக மதிப்பிடப்படும்.

தேவையான திறன்கள்

புரோகிராமிங், AI, மெஷின் லேர்னிங் அல்காரிதம்ஸ், டேட்டா கம்ப்யூட்டேஷன் போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இவைகளை பூர்த்தி செய்யும் திறன்கள் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்ப சமர்ப்பிப்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 15. ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய அனல் மின் கழகம் வாய்ப்புகள்

அதேபோல மற்றொரு புறம் நேஷனல் தெர்மல் ஃபாவர் கார்பரேஷன் (NTPC) 10 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் துணை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எலக்ட்ரிகல், சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் பணிபுரிவார்கள்.

சம்பளம் மற்றும் சலுகைகள்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ₹70,000 முதல் ₹2,00,000 வரை சம்பளம் பெறுவர். இதற்குமட்டுமல்லாது, பிற சலுகைகள் மற்றும் அதிகாரப்பூர்வ நன்மைகள் வழங்கப்படுகின்றன.

வயது மற்றும் கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்களின் வயது 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவிற்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது. NTPC பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

RRB வேலைவாய்ப்பு Big Alert: இன்று விண்ணப்பிக்காவிட்டால் வாய்ப்பு போகும்!
CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!