மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி வரை அவகாசகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
undefined
2 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 24 ஆயிரம் மாணவ - மாணவிகள் நாடு முழுவதும் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க..தமிழக அரசின் TNPLல் அருமையான வேலைவாய்ப்பு.. மாதம் 31,000 சம்பளம்.. முழு விபரம் உள்ளே !!
பிறகு இதனை தொடர்ந்து, 2 ஆம் கட்ட தேர்வு அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை வருகிற 30 ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த செய்தி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி.? முழு விபரம்