மத்திய அரசில் வேலை! 2025-ல் குவியும் வாய்ப்புகள்! விண்ணப்பிக்க இதுதான் சரியான நேரம்!

By SG Balan  |  First Published Jan 2, 2025, 6:28 PM IST

2025 புத்தாண்டில் பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. கொச்சின் ஷிப்யார்ட், மத்திய எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனம், ரயில்வே, மத்திய கிடங்கு நிறுவனம் மற்றும் என்எல்சி இந்தியா போன்ற நிறுவனங்களில் பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.


2025 புத்தாண்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பல துறைகளில் படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலைகள் காத்திருக்கின்றன. வேலை தேடுபவர்களுக்கு இந்த ஜனவரி மாதம் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறது. அவற்றில் சில முக்கியமான காலிப் பணியிட அறிவிப்புகள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிப் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. 27 வயது வரை இருக்கலாம். 44 காலிப்பணியிடங்கள் உள்ளன.பொறியியல், முதுகலை பட்டம், சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் துறைமுகம், சிப்பிங் மற்றும் வாட்டர்வேஸ் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2024

Tap to resize

Latest Videos

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electronics Engineering Research Institute)
தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் விஞ்ஞானி காலிப் பணியிடங்கள் உள்ளன. 44 காலிப்பணியிடங்களுக்கு 28 வயது வரை
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2025 மற்றும் 09.01.2025

ரயில்வே வேலை:

இந்திய ரயில்வே துறையில் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் நிறுவனத்தில் 11 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். 55 வயதுக்குள் இருப்பவர்கள் முயற்சி செய்யலாம். நேர்காணல் நடக்கும் நாள் 09.01.2025 மற்றும் 10.01.2025

மத்திய கிடங்கு நிறுவனத்தில் (Central Warehousing Corporation) காலியாகவுள்ள 179 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2025

என்எல்சி இந்தியா (NLC India) நிறுவனத்தில் 167 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். வயது வரம்பு 30. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.01.2025

இந்த வேலைவாய்ப்புகள் பற்றி முழுமையான விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியாகியுள்ள அறிவிப்புகளைப் பார்வையிடலாம்.

click me!