சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் centralbankofindia.co.in என்ற சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும். கல்வித் தகுதி, தேர்வு முறை மற்றும் பிற விவரங்களுக்கு கீழே படிக்கவும்.
காலியிட விவரங்கள்
1. எஸ்சி: 150 பணியிடங்கள்
2. எஸ்டி: 75 பணியிடங்கள்
3. ஓபிசி: 270 பணியிடங்கள்
4. இடபிள்யூஎஸ்: 100 பணியிடங்கள்
5. பொது: 405 பணியிடங்கள்
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரவரிசை (எஸ்சி / எஸ்டி / ஓபிசி / பிடபிள்யூபிடிக்கு 55%) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்த நாளில் செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும். வயது வரம்பு 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வு, விளக்கமான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். இறுதிப் பட்டியல் SC/ST/OBC/EWS/GEN போன்ற பிரிவுகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பெண்கள் / எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/-, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.750/-. டெபிட் கார்டு (ரூபே / விசா / மாஸ்டர்கார்டு / மேஸ்ட்ரோ), கிரெடிட் கார்டு, இணைய வங்கி, ஐஎம்பிஎஸ், கேஷ் கார்டு / மொபைல் வாலட் / யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்.
பிற விவரங்கள்
ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-1 பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள் மூலம் ஒரு வருட முதுகலை டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் படிப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி நிறுவனங்களை ஒதுக்கீடு செய்யும்.
மே 5 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா?
எந்தெந்த பொருட்கள் விலை குறையும்.. எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? முழு விபரம்