
மத்திய அரசின் பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி, ஆகாஷ்வாணியின் செய்திப் பிரிவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், எடிட்டர்கள் உட்பட மொத்தம் 107 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னென்ன பதவிகள், என்ன தகுதிகள்?
இந்த அறிவிப்பின் கீழ், உதவி AV எடிட்டர், காப்பி எடிட்டர், எடிட்டோரியல் நிர்வாகிகள், விருந்தினர் ஒருங்கிணைப்பாளர், செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்தியாளர் என பல பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்புடன் இதழியல் அல்லது மக்கள் தொடர்பியலில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயமாகும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 20, 2025 நிலவரப்படி, 35 வயதுக்குள் இருக்க வேண்டும் (சமஸ்கிருதப் பிரிவுக்கு 40 வயது).
சம்பளம் மற்றும் தேர்வு முறை
பணியின் தன்மைக்கேற்ப சம்பளமும் மாறுபடுகிறது. உதவி AV எடிட்டர் பதவிக்கு மாதம் ரூ.30,000, காப்பி எடிட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளர் போன்ற பதவிகளுக்கு மாதம் ரூ.35,000, மற்றும் செய்தியாளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய நாட்கள்
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 3, 2025. தகுதியான நபர்கள் குறித்த நேரத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.