அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்! தேர்வு கிடையாது! 10ம் வகுப்பு போதும்! சூப்பர் சான்ஸ்!

Published : Feb 15, 2025, 11:50 AM IST
அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்! தேர்வு கிடையாது! 10ம் வகுப்பு போதும்! சூப்பர் சான்ஸ்!

சுருக்கம்

இந்திய அஞ்சல் துறை 21,413 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.   

இந்திய அஞ்சல் துறை

இந்தியாவில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு அரசுத் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். அர்சு வேலை பெற வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்காக இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய அஞ்சல் துறை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு 21,413 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் பொதுப் பிரிவில் 1099 இடங்களும், ஒபிசி பிரிவில் 527 இடங்களும், எஸ்சி பிரிவில் 361 இடங்களும்,  எஸ்டி பிரிவில் 23 இடங்களும் காலியாக இருக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 200 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 82 காலியிடங்கள் உள்ளன.

கணினி அறிவு அவசியம் 

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருப்பதும் அவசியம். இது தவிர கணினி அறிவு இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?

18 வயது முதல் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். SC/ST: 5 ஆண்டுகள், OBC: 3 ஆண்டுகள், PwD: 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

தேர்வு செய்யப்படும் முறை

போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வும் கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு? 

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சான்றிதல் சரிபார்ப்பு நடைபெறும். தேவைப்பட்டால் மருத்துவ உடற்தகுதி பரிசோதனையும் செய்யப்படும். பொது/OBC/EWS ஆகிய பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC/ST/PwD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்னப்ப கட்டணம் கிடையாது.

சம்பளம் என்ன?

இந்த பணியிடங்களுக்கு indiapostgdsonline.gov.in என்ற தபால் துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் கிடைக்கும். 

அஞ்சல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

* முதலில் indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று புதிய பயனர்களுக்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். 

* உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும்: பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் பதிவுசெய்த பிறகு, உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும். 

* தனிப்பட்ட, கல்வி மற்றும் தொடர்பு விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். 

* கிடைக்கக்கூடிய கட்டண முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.

* பின்பு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!