ஒரு சார்ஜ் மூலம் 150 கிமீ ரேஞ்சுடன் வரும் டிவிஎஸ்-ன் M1 S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published : Oct 26, 2025, 10:20 AM IST
TVS Teased 2026 M1 S Electric Scooter

சுருக்கம்

டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது, இது ION Mobility நிறுவனத்தின் ஸ்கூட்டரின் மறுபெயரிடப்பட்ட மாடலாகும்.

இந்திய எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் விரைவில் புதியது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டது. புதிய 2026 டிவிஎஸ் M1-S ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக 2026 EICMA காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என நிறுவனம் அறிவித்துள்ளது. இது முதன்மையாக ஐரோப்பிய சந்தையை நோக்கி இருந்தாலும், இந்திய சந்தையில் அறிமுக வாய்ப்பு உள்ளது.

ION Mobility உடன் இணைப்பு

டிவிஎஸ் கடந்த சில காலமாக ION Mobility என்ற எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்யப்பட்டது. தற்போது டிவிஎஸ், ION Mobility-ன் அனைத்து சொத்துக்களையும், முக்கிய குழுவையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், M1-S என்பது ION Mobility உருவாக்கிய எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை டிவிஎஸ் தன் பிராண்டில் மறுபெயரிட்டு அறிமுகப்படுத்தும் மாடலாக மாறியுள்ளது.

முந்தைய டீசர் வெளியீடு

2025 ஆகஸ்ட் மாதம் டிவிஎஸ், இந்த ஸ்கூட்டரை முதன்முறையாக தனது இனோனேஷியன் இணையதளத்தில் டீசர் செய்தது. தற்போது, ​​2026 பதிப்பு மாறுதல்கள் கொண்ட வடிவில் வெளிவருகிறது. புதிய வடிவமைப்பு சிறப்பாக உருவாக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தையில் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வடிவமைப்பு அம்சங்கள்

2026 டிவிஎஸ் M1-S-ல் புதிய LED DRL சின்னம் புரொஜெக்டர் ஹெட்லைட் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த DRL முன்னதாகவிருந்ததைவிட விசாலமாகவும் அழகாகவும் உள்ளது. முன்னணி பகுதி இரண்டு நிற வடிவமைப்புடன் மாறியுள்ளது. உயரமான விண்ட்ஷீல் பழைய வடிவில் தொடர்கிறது.

ஸ்டைலிஷ் கிராப் ரெயில்கள்

ஃபிளாட் ஃப்ளோர்போர்டு, ஒற்றை படி சீட், ஸ்டைலிஷ் கிராப் ரெயில்கள், LED டெயில் லைட்டுகள் மற்றும் LED இன்டிகேட்டர்கள் ஆகியவை 2026 M1-S-ல் தொடரும். இந்த அம்சங்கள் பயணிகளை வசதியாகவும், ஸ்டைலிஷ் ஆகவும் மாற்றுகின்றன.

முக்கிய விவரங்கள்

M1-S-ல் 14-அங்குல் அலாய் சக்கரங்கள், முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், டெலஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன், பின் ட்வின் ஷாக் அப்சார்பர்கள், 7-அங்குல் TFT டிஸ்பிளே, ஸ்மார்ட் கீ சிஸ்டம் மற்றும் 26 லிட்டர் உட்குடுப்பு ஸ்டோரேஜ் உள்ளது. எடை 152 கிலோ மற்றும் வீல் பேஸ் 1,350 மிமீ.

பேட்டரி மற்றும் சக்தி

M1-S-ல் 4.3 kWh பேட்டரி மற்றும் ஸ்விங்-ஆர்ம் மவுண்டெட் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 12.5 kW பீக் பவர் மற்றும் 254 Nm ரியர் வீல் டார்க் (45 Nm மதிப்பிடப்பட்ட முறுக்கு) வழங்குகிறது. நிறுவனம் ஒரு சார்ஜ் மூலம் சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் எனக் கூறியுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் பற்றிய அறிவிப்பு தற்போது இல்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!
ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!