TVS Jupiter: புதிய டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம்! விலை 90,000 ரூபாய்க்கும் குறைவு!

Asianet News   | CMS
Published : Aug 27, 2026, 04:52 PM ISTUpdated : Aug 27, 2026, 06:16 PM IST
TVS Jupiter

சுருக்கம்

டிவிஎஸ் நிறுவனம் தனது பிரபலமான ஜூபிடர் ஸ்கூட்டரின் ZX வேரியன்டில் இரண்டு புதிய டூயல்-டோன் வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்பெக்ட்ரல் காப்பர் ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை 90,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது அதிகம் விற்பனையாகும் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் புதிய 'டூயல்-டோன் ஸ்பெக்ட்ரல்' ரேஞ்சை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதன் ZX வேரியன்டில், ஸ்பெக்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்பெக்ட்ரல் காப்பர் என இரண்டு புதிய இரட்டை வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலின் விலை 90,000 ரூபாய்க்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வண்ணங்கள், ஸ்கூட்டருக்கு ஒரு பிரீமியம் மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தை நெருங்கும் வேளையில், சந்தையில் போட்டியைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்குப் புதிய தேர்வுகளை வழங்கவும் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இன்ஜின் மற்றும் வசதிகளில் மாற்றமில்லை!

புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டதைத் தவிர, ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் அதே 110சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்தான் இதிலும் தொடர்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.7 bhp பவரையும், 8.8 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

வசதிகளைப் பொறுத்தவரை, டிவிஎஸ் ஜூபிடர் ZX வேரியன்ட் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட க்ளோவ் பாக்ஸ் ஆகியவை அடங்கும். இது அன்றாடப் பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

மேலும், பயணத்தின்போது மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ள வசதியாக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை வைத்துக்கொள்ள 21 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. ஆக, தோற்றத்தில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது; மற்றபடி இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமான அதே ஜூபிடர்தான்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hyundai : மீண்டும்... மீண்டுமா! ஒரே ஆண்டில் 3வது முறையாக உயரும் ஹூண்டாய் கார்களின் விலை..!
TVS iQube: 145 கி.மீ. ரேஞ்ச், டைப்-சி சார்ஜர்... டிவிஎஸ்ஸின் புதிய ஸ்பெஷல் எடிஷன்