
டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையை நோக்கி புதிய வாகன உத்தியை வகுத்துள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலை வரம்பில் எஸ்யூவி மற்றும் பிரீமியம் பிரிவுகளில் பல புதிய மாடல்கள் வரவுள்ளன.
இதன் வரிசையில் அர்பன் காம்பாக்ட் எலக்ட்ரிக் கார்கள், லைஃப்ஸ்டைல் எஸ்யூவிகள், மிட்சைஸ் குடும்ப எஸ்யூவிகள், பிரீமியம் ஐவிகள் மற்றும் பல ஃபேஸ்லிஃப்ட்ஸ், சிறப்பு பதிப்புகள் அடங்கும். இவை பயனர்களுக்கேற்ப புதிய அம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் வரும்.
டாடா சியாரா எஸ்யூவி 2030-க்குள் அறிமுகப்படுத்தப்படும் ஏழு புதிய மாடல்களில் முதலாவதாக சந்தையை அடையும். அதன் உற்பத்தி 2026 தொடக்கத்தில் தொடங்கி, மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
குறைந்த வேரியண்ட்களுக்கு புதிய 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், உயர் வேரியண்ட்களுக்கு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் பதிப்பு வழங்கப்படும். ஹாரியர் IV-யிலிருந்து பவர்டிரெய்ன் பெற்ற இந்த எஸ்யூவி, ADAS லெவல் 2, டிரிபிள் ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட்டிங், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கும்.
டாடா ஸ்கார்லெட், 4 மீட்டர் கீழ் புதிய லைஃப்ஸ்டைல் எஸ்யூவி, டாடா எஸ்யூவி வரிசையை விரிவுபடுத்தும். “மினி சியரா” எனும் பெயரில் அறியப்படும் ஸ்கார்லெட், சியாரா போன்ற வடிவமைப்புகளைப் பெற்றிருக்கும். 2026 இரண்டாம் பாதியில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கார்லெட் மோனோகோக் சேசிஸை அடிப்படையாக கொண்டது மற்றும் மல்டி-பவர்டிரெய்ன் உத்தியைக் கையாளும். இதன் இன்ஜின்கள் நெக்ஸான் 120bhp, 1.2L டர்போ பெட்ரோல், புதிய 1.5L பெட்ரோல் அல்லது கர்வ்-இன் 125bhp, 1.2L டர்போ பெட்ரோல் ஆக இருக்கலாம். ஒரு டீசல் இன்ஜினும் வர வாய்ப்புள்ளது.
மேலும், டாடா ஸ்கார்லெட் முழு-எலக்ட்ரிக் வேரியண்டையும் வழங்க வாய்ப்பு உள்ளது. பேட்டரி பேக் மற்றும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் இதன் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த புதிய எஸ்யூவி வரிசை, இந்திய வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலையை வலுப்படுத்தும்.