2.5 லட்சம் EV விற்பனை.. ராஜா ராஜாதான்! இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் சாதனை!

Published : Dec 24, 2025, 03:57 PM IST
tata nexon ev

சுருக்கம்

இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மின்சார கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. எதிர்காலத்தில் சியரா EV, அவின்யா போன்ற புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மின்சார கார்கள் (EV) மீது மக்கள் கொண்ட ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். சமீபத்தில், இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மின்சார கார்களை விற்பனை செய்து, டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இது நிறுவனத்தின் மின்சார பயணியர் வாகன வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் தனது முதல் பொதுமக்களுக்கு உரிய மின்சார காரான Tata Nexon EV-யை 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்பின் குறுகிய காலத்திலேயே, நெக்ஸான் EV இந்தியாவில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த முதல் மின்சார காராக உருவெடுத்துள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதற்கான முக்கிய சான்றாகும்.

தற்போது டாடாவின் EV வரிசையில் நெக்ஸான் EV மட்டுமல்ல Tata Tiago EV, Tata Punch EV, Tata Harrier EV மற்றும் ஃப்ளீட் பயன்பாட்டிற்கான Xpress-T EV போன்ற மாடல்களும் உள்ளன. விலை நிலைகள் மற்றும் பாடி டைப் தேர்வுகள் இருப்பதாலேயே, பயணியர் EV சந்தையில் டாடா பெரும் பங்கைக் கைப்பற்றியுள்ளது.

EV விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம், தனிநபர் வாடிக்கையாளர்கள், கமர்ஷியல் ஃப்ளீட் ஆப்ரேட்டர்கள் அதிக அளவில் மின்சார கார்களைத் தேர்வு செய்வதுதான். குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த மாற்றம் வேகமாக நடைபெறுகிறது. டாடா EV வாடிக்கையாளர்கள் இதுவரை 5 பில்லியன் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், EV-கள் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றவை என்பது நிரூபிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்களின் வளர்ச்சிக்காக, டாடா மோட்டார்ஸ் சார்ஜிங் வசதிகளிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. Tata Power உடன் இணைந்து, நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் பைண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது EV பயனர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

எதிர்கால திட்டங்களைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் புதிய EV பிளாட்ஃபாரத்தை கொண்டு பல மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2026 தொடக்கத்தில் Tata Sierra EV மற்றும் அப்டேட் செய்யப்பட்ட Punch EV வெளியாகும். மேலும், பிரீமியம் மற்றும் லக்ஷுரி பிரிவுக்கான Tata Avinya வரிசை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும். 2030-க்குள் ஐந்து புதிய EV பிராண்டுகளை வெளியிடுவது டாடாவின் நீண்டகால இலக்காக உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிராமம் முதல் சிட்டி வரை.. அதிக பேர் வாங்கிய மலிவு பைக் இதுதான்.. டாப் 5 லிஸ்ட் இங்கே
இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டராக சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா