Tata Car Offers: டாடா கார்களுக்கு ஆகஸ்ட் மாதம் சூப்பர் தள்ளுபடி! ரூ.3.35 லட்சம் வரை ஆஃபர்!

Published : Aug 22, 2026, 05:44 PM IST
Tata Car Discounts

சுருக்கம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்துக்காக பெட்ரோல், சிஎன்ஜி, எலக்ட்ரிக் கார்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. சில எலக்ட்ரிக் மாடல்களுக்கு ரூ.3.35 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும். இதில் கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்றவை அடங்கும். இந்த ஆஃபர்கள் டீலர்ஷிப், மாடல் மற்றும் ஸ்டாக்கை பொறுத்து மாறுபடும்.

டாடா கார் வாங்க பிளான் பண்றீங்களா? அப்போ இந்த ஆகஸ்ட் மாசம் உங்களுக்கு சரியான நேரம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னோட பெட்ரோல், சிஎன்ஜி, எலக்ட்ரிக் மாடல்களுக்கு பல ஆஃபர்களை அறிவிச்சிருக்கு. கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை, லாயல்டி ரிவார்டு, 'ஃப்ரீடம் செலிபிரேஷன்' ஆஃபர்னு பலதும் இதில் அடங்கும். சில எலக்ட்ரிக் மாடல்களுக்கு மொத்த சலுகை ரூ.3.35 லட்சத்துக்கும் மேல போகுது. ஆனா, இந்த ஆஃபர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. நீங்க வாங்குற நகரம், டீலர்ஷிப், மாடல், வேரியன்ட், ஸ்டாக் இருப்பு, வாடிக்கையாளரின் தகுதினு பல விஷயங்களை பொறுத்து சலுகைகள் மாறுபடும்.

டியாகோ, டிகோர்; பழைய ஸ்டாக்குக்கு தள்ளுபடி

புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு இப்போதைக்கு அதிகாரப்பூர்வ தள்ளுபடி எதுவும் இல்லை. ஆனா, ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய டியாகோ, டிகோர் மாடல்களோட சில குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு டீலர் லெவல்ல சலுகைகள் கிடைக்கலாம். XE வேரியன்ட்டுக்கு இந்த ஆஃபர் கிடையாது. மத்த சில வேரியன்ட்களுக்கு ரூ.15,000 வரை கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கும். இதுபோக, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கு. பழைய டியாகோ மாடல்களில் சில யூனிட்களுக்கு ரூ.5,000 'ஃப்ரீடம் செலிபிரேஷன்' போனஸும் தராங்க. பழைய டியாகோ EV ஸ்டாக்குக்கு மொத்தமா ரூ.1.45 லட்சம் வரை சலுகை கிடைக்கலாம்.

அல்ட்ராஸுக்கும் ஆஃபர்கள் உண்டு

டாடா அல்ட்ராஸ் வாங்க நினைக்குறவங்களுக்கும் ஆகஸ்ட் மாசத்துல பல ஆஃபர்கள் இருக்கு. ரூ.35,000 வரை கேஷ் சலுகையும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சப்போர்ட்டும் கிடைக்கும். இதுமட்டுமில்லாம, ரூ.20,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. இறுதி சலுகை, நீங்க தேர்ந்தெடுக்கிற வேரியன்ட் மற்றும் ஸ்டாக்கை பொறுத்து மாறும்.

பஞ்சுக்கு ஆஃபர் இல்லை, பஞ்ச் EV-க்கு செம சலுகை

டாடா பஞ்ச் காரோட பெட்ரோல், சிஎன்ஜி மாடல்களுக்கு இந்த மாசம் அதிகாரப்பூர்வமா எந்த ஆஃபரும் இல்லை. ஆனா, பஞ்ச் EV-யின் பழைய ஸ்டாக் யூனிட்களுக்கு ரூ.1.45 லட்சம் வரை சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த ஆஃபர், டீலர்ஷிப் மற்றும் நிறுவனத்தோட ஸ்டாக்கை பொறுத்துதான் கிடைக்கும்.

நெக்ஸானிலும் தள்ளுபடி
டாடா நெக்ஸான் ICE மாடலுக்கு இந்த மாசம் சூப்பரான சலுகைகள் இருக்கு. ரூ.55,000 வரை கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் சப்போர்ட், ரூ.20,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகைனு முக்கிய ஆஃபர்கள் தராங்க. நெக்ஸான் EV-க்கு ரூ.45,000 வரை சலுகைகள் இருக்கு.

கர்வ் (Curvv) மாடலுக்கு ரூ.1.65 லட்சம் வரை சலுகை
டாடா கர்வ் மாடலுக்கு ரூ.30,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.45,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை, ரூ.50,000 லாயல்டி போனஸ் கிடைக்கலாம். அதேநேரம், 2025 மாடல் இயர் கர்வ் EV-க்கு ரூ.3.5 லட்சத்துக்கும் மேல மொத்த சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கு. இது பழைய ஸ்டாக்கை கிளியர் பண்றதுக்காக கொடுக்கிற ஆஃபர்ங்கிறதால, டீலர்ஷிப்பை பொறுத்து ஸ்டாக் இருப்பு மாறும்.

சியரா, ஹாரியர், சஃபாரி
புதிய சியரா ICE மாடலுக்கு ரூ.30,000 ஸ்கிராப்பேஜ் சலுகையும், சில குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு லாயல்டி இன்சென்டிவும் தராங்க. சியரா EV-க்கு இப்போதைக்கு எந்த அதிகாரப்பூர்வ தள்ளுபடியும் அறிவிக்கல. ஹாரியர், சஃபாரி மாடல்களுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.35,000 ஸ்கிராப்பேஜ் சலுகை கிடைக்கலாம்.

ஹாரியர் EV-க்கு மெகா ஆஃபர்

இந்த லிஸ்ட்லயே ரொம்ப முக்கியமான ஆஃபர் ஹாரியர் EV-க்குதான். ரூ.1 லட்சம் வரை 'ஃப்ரீடம் செலிபிரேஷன்' ஆஃபர், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.75,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை கிடைக்கலாம். ஏற்கெனவே டாடா EV கார் வெச்சிருக்குறவங்களுக்கு ரூ.1 லட்சம் வரை லாயல்டி சலுகையும் கிடைக்க வாய்ப்பிருக்கு. டாடா ICE மாடல் வெச்சிருக்குற வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் லாயல்டி சலுகைகள் கிடைக்கலாம். டாடா குரூப் ஊழியர்களுக்கு சில குறிப்பிட்ட வேரியன்ட்களில் கார்ப்பரேட் தள்ளுபடியும் இருக்கு.

ஆஃபர் விவரங்களை டீலரிடம் உறுதிப்படுத்துங்கள்

இந்த ஆஃபர் விவரங்கள் எல்லாமே ஒரு தோராயமான கணக்குதான். நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், மாடல் வருடம், வேரியன்ட், வாடிக்கையாளரின் தகுதினு பல விஷயங்களை பொறுத்து இறுதி தள்ளுபடி மாறும். அதனால, கார் புக் பண்றதுக்கு முன்னாடி, உங்க பக்கத்துல இருக்குற டாடா மோட்டார்ஸ் டீலர்கிட்ட இப்போதைய கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை, லாயல்டி ஆஃபர் பத்தின சரியான விவரங்களை கேட்டு உறுதிப்படுத்திக்கிறது நல்லது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Baleno Facelift : வென்டிலேட்டட் சீட் முதல் அடாஸ் வரை... பலேனோ ஃபேஸ்லிஃப்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்னென்ன?
Kia Sonet Stunning Features: ரூ.8.28 லட்சத்துக்கு 5-Star Safety + Sunroof! இந்த காரை பார்த்தா வியந்துபோவீங்க!