
இந்தியாவில் தொழில் முயற்சி துறையில் டிஜிட்டல் நிதி திட்டங்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. ஆதார் இணைந்த வங்கி சேவைகள், யூபிஐ, ஜிஎஸ்டி, டிஜிட்டல் கட்டணங்கள் போன்ற நவீன நிதி வாயில்கள் காரணமாக சிறு வியாபாரிகள் மற்றும் கிக் வேலை செய்பவர்கள் எளிதில் கடன் பெறுகின்றனர். முன்பு வங்கிகளில் கடன் மறுக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் இப்போது நிதி உதவி கிடைக்கிறது.
பொருளாதார நிபுணர் டாக்டர் ஜெயஜித் பாட்டாசார்யா இதுபற்றி எம்எஸ்எம்இ கடன் திட்டங்கள் வணிக வாகனங்களை வெறும் போக்குவரத்து சாதனமாக அல்ல, தொழில் முதலீடாகக் கருதுகின்றன. இதன் விளைவாக, டாடா எஸ் ப்ரோ போன்ற வாகனங்கள் இப்போது தொழில் தொடங்குவதற்கான கதவாக மாறியுள்ளன.
பெண்கள் சுய உதவி குழுக்களும் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் டாடா ஈஸ் வாகனங்களை கொண்டு உள்ளூர் சப்ளை சங்கிலிகளை வலுப்படுத்தி, தங்கள் சமூகங்களில் வேலை வாய்ப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் உருவாக்குகின்றனர். இதன் மூலம் பெண்கள் முன்னணி தொழில் முனைவோராக உருவெடுக்கின்றனர். நிதி ஆதாரங்கள் எளிதில் கிடைக்கும் போது புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.
ஒரு வாகனம் போக்குவரத்து சாதனத்தைத் தாண்டி, உரிமை, மரியாதை மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக மாறுகிறது. இதனால், டாடா எஸ் ப்ரோ போன்ற வாகனங்கள் தொழில்முனைவோரை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் முன்னெடுத்து வருகின்றன. டிஜிட்டல் நிதி மற்றும் கடன் திட்டங்களின் இணைவு, இந்தியாவின் புதிய தொழில் முயற்சி புரட்சிக்கான அடித்தளமாக திகழ்கிறது.