ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான மோன்ட்ரா எலக்ட்ரிக் புதிய கார்கோ வாகனங்கள்

By Velmurugan s  |  First Published Jan 23, 2025, 9:48 PM IST

புதிய கார்கோ வாகன வரிசையை மோன்ட்ரா எலக்ட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நடைபெற்ற விழாவில் ஏவியேட்டர் (இ-எஸ்சிவி) மற்றும் சூப்பர் கார்கோ (இ-3 வீலர்) ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


மோன்ட்ரா எலக்ட்ரிக் புதிய கார்கோ வாகன வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நடைபெற்ற விழாவில் ஏவியேட்டர் (இ-எஸ்சிவி) மற்றும் சூப்பர் கார்கோ (இ-3 வீலர்) ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொழில்துறையில் மிக உயர்ந்த 245 கி.மீ சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் மற்றும் 170 கி.மீ ரேஞ்சுடன் ஏவியேட்டர் (இ-எஸ்சிவி) வருகிறது. 3.5 டன் எடை கொண்டது. 80 கிலோவாட் பவர் மற்றும் 300 என்எம் டார்க் கொண்டது. 7 ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் கிலோமீட்டர் வரை உத்தரவாதத்துடன் வரும் இந்த மாடலின் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை 15.99 லட்சம் ரூபாய்.

Latest Videos

இந்த பிரிவில் சிறந்த சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் (200+ கி.மீ) மற்றும் 150 கிலோமீட்டர் நிஜ வாழ்க்கை ரேஞ்சையும் சூப்பர் கார்கோ இ-மூன்று சக்கர வாகனம் வழங்குகிறது. 1.2 டன் எடை கொண்ட இந்த வாகனம் 3 கார்கோ பாடி வகைகளிலும், 15 நிமிட முழு சார்ஜ் விருப்பத்திலும் கிடைக்கிறது. டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை 4.37 லட்சம் ரூபாய்.

மோன்ட்ரா எலக்ட்ரிக் தலைவர் அருண் முருகப்பன், துணைத் தலைவர் வெள்ளையன் சுப்பையா, மேலாண் இயக்குனர் ஜலஜ் குப்தா ஆகியோருடன் மூன்று சக்கர வாகன வணிகத் தலவர் ராய் குரியன், சிறு வணிக வாகனங்கள் தலைமை நிர்வாக அதிகாரி சாஜு நாயர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதியாக புதுமையான மற்றும் நிலையான சுத்தமான மொபிலிட்டி தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளதாக மோன்ட்ரா எலக்ட்ரிக் (டிஐ கிளீன் மொபிலிட்டி) தலைவர் அருண் முருகப்பன் தெரிவித்தார். ஏவியேட்டர் இந்தியாவின் முதல் உண்மையான இவி என்று மோன்ட்ரா எலக்ட்ரிக் (டிஐ கிளீன் மொபிலிட்டி) மேலாண் இயக்குனர் ஜலஜ் குப்தா கூறினார்.

click me!