
இந்தியாவின் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான Maruti Suzuki பிரெஸ்ஸா விரைவில் ஒரு முக்கிய அப்டேட்டுடன் சந்தையில் களமிறங்க உள்ளது. 2022-ல் அறிமுகமானதிலிருந்து சுமார் 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, தனது பிரிவில் ‘பெஸ்ட் செல்லிங்’ என்ற நிலையை தக்க வைத்துள்ளது. தற்போது மாதத்திற்கு சராசரியாக 15,000 யூனிட்கள் விற்பனையாகும் நிலையில், 2026 கோடையில் பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களில் பெரிய முன்னேற்றமாக, புதிய பிரெஸ்ஸாவில் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இதில் லென் கீப் அசிஸ்ட், லென் டிபார்ச்சர் எச்சரிக்கை, அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், அவசர தானியங்கி பிரேக்கிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் நகரமும் நெடுஞ்சாலையும் பாதுகாப்பாக மாறும்.
வசதிக்காக, முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள் சேர்க்கப்படலாம். கோடை காலத்தில் வியர்வையை குறைத்து பயண அனுபவத்தை மேம்படுத்த இது உதவும். மேலும், டிரைவர் சீட்டிற்கு எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் உயரம் மற்றும் நிலையை எளிதாக மாற்றலாம்.
உட்புறத்தில் ஹை-டெக் தோற்றத்தைக் கொடுக்க 10.25-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம். இதில் பல தீம்கள், பயண தகவல்கள் மற்றும் வாகன நிலை விவரங்கள் தெளிவாகக் காண முடியும். இதேபோல், 10.1-இன்ச் HD டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto ஆதரவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CNG பயனர்களுக்கு நல்ல செய்தியாக, புதிய பிரெஸ்ஸாவில் அண்டர்பாடி CNG டேங்க் அமைப்பு வரலாம். இதனால் டிக்கியில் கூடுதல் இடம் கிடைத்தது, நீண்ட பயணங்களில் பயணப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
வெளிப்புற தோற்றத்தில் புதுப்பிப்பு காணப்படும். புதிய வடிவமைப்புடைய பாம்பர்கள், கவர்ச்சிகரமான ஹெட்லெம்ப்கள், டெயில்லெம்ப்கள் மற்றும் புதிய 16-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படலாம். மொத்தத்தில், பாதுகாப்பு, வசதி மற்றும் ஸ்டைல் மூன்றையும் இணைக்கும் இந்த ஃபேஸ்லிஃப்ட், பிரெஸ்ஸாவின் விற்பனை வேகத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.