
உலகளாவிய வாகனத் துறையில் இந்தியாவின் மாருதி சுசுகி நிறுவனம் மீண்டும் தனது வலிமையை நிரூபித்துள்ளது. சமீபத்திய மதிப்பீட்டில், மாருதி சுசுகி உலகின் 8வது மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தியாளர் நிறுவனமாக இடம் பிடித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 57.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது. இந்த சாதனை, ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன், அமெரிக்காவின் ஃபபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்திய சந்தை மற்றும் பட்ஜெட் கார்கள்
இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறிய கார்கள் மாருதி சுசுகிக்கு வலுவான இடத்தை வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் வாடிக்கையாளர்களின் பெரிய ஆதரவு, விருப்பமும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது. சிறிய கார்கள் எளிதில் விற்கப்படுவதால், மாருதி சுசுகி இந்திய சந்தையில் தனித்துவமான மற்றும் வலுவான முன்னணியைப் பெற்றுள்ளது.
புதிய ஜிஎஸ்டி அமைப்பின் முக்கிய பங்கு
மாருதி சுசுகியின் உலகளாவிய வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவின் புதிய ஜிஎஸ்டி அமைப்பு பங்காற்றியுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்குப் பிறகு, நிறுவனத்தின் சிறிய கார்களின் விலை மேலும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளை அதிகரித்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம்
புதிய ஜிஎஸ்டி அமைப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய ஆட்டோ பங்குகளில் மீண்டும் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது. இதன் மூலம் மாருதி சுசுகியின் பங்கு விலை அதிகரித்து, நிறுவனத்தின் மதிப்பை உலகளவில் உயர்த்தியுள்ளது.
உலகளாவிய வாகன நிறுவனங்களில் தரவரிசை
உலகளவில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் டெஸ்லா முதலிடம் பிடித்துள்ளது. டொயோட்டா 314 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில், BYD 133 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஃபெராரி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை முறையே நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களில் உள்ளன.
ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன்
மாருதி சுசுகி 57.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முன்னேறியதில், ஃபபோர்டு 46.3 பில்லியன், ஜெனரல் மோட்டார்ஸ் 57.1 பில்லியன், ஃபோக்ஸ்வேகன் 55.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பின்தங்கியுள்ளது. இதன் மூலம் மாருதி சுசுகி இந்தியாவின் தனித்துவமான வளர்ச்சியையும், உலகளாவிய வாகனத் துறையில் போட்டித்திறனையும் நிரூபித்துள்ளது.