Maruti Baleno: வெறும் ரூ.6 லட்சத்தில் புதிய மாருதி பலேனோ அறிமுகம்.. அசத்தல் டிசைன், சூப்பர் வசதிகள்!

Published : Sep 05, 2026, 10:11 PM IST
Maruti Baleno

சுருக்கம்

Maruti Baleno: மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் ரூ.6.10 லட்சத்தில் மாருதி பலேனோ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது புத்தம் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ADAS தொழில்நுட்பம், அட்டகாசமான டிசைன், 1.2 லிட்டர் இன்ஜின் என பல சிறப்பம்சங்களுடன் இந்த கார் களமிறங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்பதுதான் ஹைலைட். இதன் மூலம், இந்த ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.

வெறும் ரூ.6.10 லட்சத்தில் மாருதி பலேனோ அறிமுகம்

புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் முன்பக்க கிரில் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் பார்வையிலேயே இது ஒரு புதிய டிசைன் கொண்ட கார் போல தோற்றமளிக்கிறது. புதிய ஹெட்லேம்ப்ஸ், சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற டெக்னாலஜி சார்ந்த வசதிகளும் இதில் உள்ளன.

Kia Sorento: ஃபோர்டு, ஃபார்ச்சூனருக்கு எண்ட் கார்டு? பாதி விலையில் கியா சொரென்டோவின் மாஸ் என்ட்ரி!

ADAS டெக்னாலஜி

இந்த காரில் ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு லெவல் 1 ADAS வசதி இதில் உள்ளது. இதன் மூலம், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், சேஃப் டிரைவ் அலர்ட் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் இப்போது இந்தியாவில் கார்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில், டிசையர், பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் போன்ற கார்களின் பாதுகாப்பு தரம் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டில் 6 ஏர்பேக்குகள், ABS, EBD, ESC, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

இன்ஜின் எப்படி?

புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் இன்ஜினில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. தற்போது சந்தையில் உள்ள பலேனோ காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 90 hp பவரையும், 113 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இதில் உள்ளன. CNG வேரியன்ட்டும் கிடைக்கிறது, ஆனால் அது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வரும்.

Volkswagen Offers: போனா வராத ஆஃபர்.. இந்த கார் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா! உடனே வாங்கி போடுங்க

மைலேஜ், 360 டிகிரி கேமரா

இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு சுமார் 22.35 கி.மீ முதல் 22.94 கி.மீ வரையிலும், சி.என்.ஜி (CNG) வேரியன்ட் கிலோவிற்கு சுமார் 30.61 கி.மீ வரையிலும் மைலேஜ் தரக்கூடியது. காரை எளிதாக பார்க் செய்யவும், டிரைவர் சாலையிலிருந்து கவனத்தை திருப்பாமல் வேகம் மற்றும் பிற தகவல்களை அறியவும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வசதி இதில் உள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் காரின் இருப்பிடத்தை அறிவது, கதவுகளை லாக்/அன்லாக் செய்வது மற்றும் ஏசி-யை ரிமோட் மூலம் இயக்கும் வசதிகள் இதில் உள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kia Sorento: ஃபோர்டு, ஃபார்ச்சூனருக்கு எண்ட் கார்டு? பாதி விலையில் கியா சொரென்டோவின் மாஸ் என்ட்ரி!
Tata Nexon: டாடா நெக்ஸானின் அடுத்த அதிரடி மூவ்.. இந்தியாவே காத்திருக்கும் அந்த செய்தி வந்தாச்சு.!